E.ஆரோக்கியதாஸ்
உயிர்ப்பும் உயிரும்
நானென இருந்து,
உறவை மறந்து
பறந்தது ஏனோ?
நிழல் தரும் மரமாய்
நீயாய் இருக்க,
இடமதை பெரிதாய்
தந்திட கருதி,
உனை வீழ்த்தி கொண்டதேனோ?
இடமோ காலியாய்
பெரிதாய் இருக்க,
நிழலின்றி போனதே
இளைப்பாறி மகிழ,
ஏனிந்த அவசரம் - உனை
ஆண்டவர் அழைத்தார்
விரைந்து சென்றாயோ
தேடியங்கு நீயும்.
துக்கங்கள் எங்களுக்குள்
தூக்கலாயிருக்க,
பாவங்கள் களைந்து
ஆண்டவர், உமை
தொழுவத்தில் ஏற்க,
துதிப்போம் தினமும்
நாங்கள் "ஆமென்" கூறி.
#எங்கள் நண்பரும், அண்மை வீட்டுக்காரரும், எங்கள் தெரு நன்மக்கள் நலசங்க உருப்பினரும், சேலம் நகர காவல் துறையை சேர்ந்தவருமான அன்னார் E.ஆரோக்கியதாஸ் நேற்று (16/08/2015) அன்று இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் பகிர்ந்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment