வலை மொழி பேசி
இதழினை நனைத்தாய்.
சொற்களின் வழியே
கொக்கிப்போட்டு இழுத்தாய்.
தூண்டில் புழுவாய்
வார்த்தைகளின் ஜாலம்.
விரைந்து வந்து
மாட்டிக்கொள்ள இருந்தேன்.
மாட்டியதாய் நினைத்து
நீ தூண்டியலை இழுக்க,
பெருமூச்சு விட்டேன் – உன்
நோக்கத்தை நினைத்து.
விரைந்து சென்றேன்
தூரமாய் விலகி.
வீசியிருப்பாய்
வேறொன்றை பிடிக்க.
கவலைப்பட்டேன்
காப்பாற்ற வழியின்றி.
No comments:
Post a Comment