காற்றோடு காற்று இயங்கி வர
சிலையானேன் சிறுபொழுது நிலைமறந்து
நிழல்மரத்து சிறுகோட்டை தலைக்கோட்ட
பட்டென்று போனது என் நிலை பறந்து.
நினைவுகள் ஓடியது தொடர்ச்சி பிடிக்க,
விழிகள் தேடியது அரக்க பறக்க
உணர்வுகள் ஓடியது உடல் முழுக்க
கைகளோ தேடியது தரை முழுக்க
ஊதுக்குழல் (விசில்) இல்லை என்னருகில்
வாரிசுமில்லை, என் கண் தொடர்பில்
குழலூதும் ஒலிக்கேட்டால் திரும்பி வர
கட்டளையிட்ட நானே எனை மறந்தேன்
தொடர்ச்சியோ நொடிப்பொழுதில் மாட்டிக்கொள்ள
சட்டென்று நிலை குலைந்தேன் தவறுணர்ந்து
.
குழலூத நான் மறந்தேன்
விடையின்றி அவன் மறைந்தான்.
பூங்கா புவியாக, இழப்பால் பெரிதாக
காட்டாற்று வெள்ளமோ, முகடுயர்ந்த அருவியோ
உணர்வுகளின் விசையாக, சலசலத்து பெருக்கெடுக்க
விழித்தேட வழி வேண்டி அவசர சட்டமிட்டேன்,
நதிமூலம் நெஞ்சுக்கு(கூட்டுக்கு)ள் உருண்டோட.
குழலூதும் ஒலிக்கேட்டு, ஓடினேன் குழந்தையாக
பார்வைக்குறைந்த மானிடன் போல்,
குனிந்து பார்த்தேன் குழந்தைகளை.
அஸ்தமனம் நெருங்கிவர, வாழ்நிலையோ வலியூட்ட
வேலியிடம் உரையிட்டேன், விரைந்தெமக்கு
மீட்டுத்தர
அண்டத்து அரசனிடம் வரிசையாய் வேண்டுதல்கள்
அடிமையாய் தனையேற்று, பாலகனை தந்தருள.
ஒப்புவித்து நான் வருவேன் உம்மிடம் ஒப்புவிக்க
உலகாளும் உன் செவிகளுக்கு என் ஓலங்கள் கேட்காதோ
கணப்பொழுதில் மீட்டருளி என் தவறினை பொறுப்பையே.
No comments:
Post a Comment