Dhavappudhalvan Badrinarayanan A M:
தமிழ்நாடு அரசாங்க சேவை ஆணைக்குழு நடத்தவிருக்கும் குரூப் 1 தேர்வுகளை (TNPSC GROUP 1 EXAMS ), பகுதி பார்வை குறைபாடு ( Visually impaired ) 40% சதவீதத்திற்கு மேலுள்ளவர்கள் தேர்வு எழுத அனுமதி உண்டாவென்பதை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பேராசிரியர். சகாதேவன் அவர்கள் அளித்த பதில்:
மத்திய அரசு வெளியிட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு முழுமையாக ஏற்று, அதனை அமுல்படுத்தும் வகையில் ஆணைகள் வெளியிட்டுள்ளது. அதன்படி 40% விழுக்காடு (சதவிகிதம்) மாற்றுத்திறனுடைய அனைவரும் தமிழ்நாடு தேர்வு ஆணையத்தால் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் பங்குபெற தகுதியுடையவர்களாவர்.
எனினும் தமிழ்நாடு அரசு ஆணையம் வெளியிடுகின்ற விளம்பரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக கண்டறியப்பட்ட ( Identified Post ) பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
#தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் வெளியிடப்படும் ''உதவிக்கரம்'' ஜூலை 2015 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment