அன்று
நீ அறியா நிலையினிலே
ஊரறிய செய்தோம்
உன் பெயரினையே.
இன்று
நீ அறிந்த நிலையினிலே
உலகறிய செய்வாய்
உன் பெயரினையே.
நலனோடும் புகழோடும்
வாழ்கவென
வாழ்த்துகிறோம்
நாமகரணம் பெற்ற
இந்நாளில்.
இனிய பெயர் சூட்டிய ( நாமகரண ) நன்னாள்
வாழ்த்துக்கள்
#சென்ற 17-04-15ல் பதிக்க வேண்டியது
No comments:
Post a Comment