நிலவென நினைத்த
நீ சுட்டெரிக்கும் நெருப்பாக.
கல்லென நினைத்த நான்
கரைந்துருகும் மெழுகாக.
வாயும் அடைத்து விட்டது (மௌனித்தது)
சொற்களின்றி.
உடலும் துவண்டு விட்டது (துவண்டது)
வலுவின்றி.
மனமும் வரண்டு விட்டது (வரண்டது)
நீயின்றி.
கண்களும் மூடிவிடும்
ஒளியின்றி
இதயமும் வெடித்து விடும்
வெளியேற்ற வழியின்றி.
#03/09/2007 ல் எழுதியது. அடைப்புக்குறிக்குள் இருப்பது இன்றைய (24/08/2015) திருத்தங்கள்.
No comments:
Post a Comment