உலா வரும் நேரங்களிலும்
உற்சாக நடை போடும்.
நினைவுகளின் குவியல்களில்
சீட்டியடிக்கும் நினைவுகளிது.
வளர்ந்து வரும் விறுவிறுப்பில்
பரபரக்கும் நேரமிது.
எத்தனையோ கோர்வைகள்
தனித்தனியாய் இருந்தாலும்,
அதிலே இக்கோர்வை
மினுமினுக்கும் தனியொளியாய்.
முயற்சிகள் கனியட்டும்
உன் வாழ்வில்.
வெற்றிக்கொடி பறக்கட்டும்
நின் செயலால்.
மகிழ்வாக நின் வாழ்வு நடைப்போட
பேரனே!
ஆசிர்வதித்து வாழ்த்தினோம்
அன்பாக.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பேரனே.
No comments:
Post a Comment