முதுமையான பின்னும்
ஊஞ்சல் கட்டி ஆடுதடி
இளமையான உன்னுருவம்
துள்ளலுடன் என்
மனத்தில்.
காதலித்தபோது – அன்று
கைவிரல் பட்டதில்லை.
காதல்மொழி பேசிய நாம்
கட்டி அணைத்ததில்லை.
காத்திருந்தோம்
நாமிருவர்
கரம் பிடிக்கும் நாள்
நோக்கி.
கனிந்த அந்நாளில்
மெய் சிலிர்த்தோம்
பேச்சின்றி.
உள்ளத்து உணர்வுகளா(லி)ல்
கோட்டையொன்றை கட்டி
வைத்தோம்.
உருமாற்றி அழகு
பார்க்க
விளையாட்டாய்
ஈடுபட்டோம்.
காலத்தின் சுவடுகளோ
(ள்)
அழியாமல் தடம் பதிக்க,
கழிந்ததடி வாழ்வது
நம்மிலே ஊடுருவி.
No comments:
Post a Comment