தியாவுக்கு வாழ்த்து – 27/07/2013 (முதலாமாண்டு).
முத்தான பேத்தியவள்
முறுவலித்தாள் எமைப்பார்த்து.
சொத்தான அவளுமக்கு
சொக்க வைத்தாள் உமை மறந்து.
பாசமும் நேசமும் சேர்த்தணைக்க
பாலும் தேனுமாய் அவளிருக்க
உச்சி வெயில், நாடுநிசி கருதாமல்
உச்சரிக்கும் சொற்களில் உமை இழந்தீர்
உச்சி முகர்ந்து நீர் சிலிர்க்க
உள்ளம் மகிழ அவள் சிரிக்க
நேரம் காலமில்லாமல்
பேத்தியுடன் நீங்கள் கலந்திருக்க,
வாழ்த்தினோம் முவ்வரையும்
வளனொடு வாழ்வும் பல்லாண்டு
நலமும் மகிழ்வும் இணையப் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவென.
No comments:
Post a Comment