Translate

Sunday, October 8, 2017

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

 நன்றான இடைவெளி 
நான்கதை நீர் கொடுத்தீர்.
நல்முத்தாய் இரண்டுமது
நலமுடன் சிறப்படைய,
நான்முகனின் ஆசிகளால்
நான் வழங்கிய வாழ்த்துக்கள்.

தங்கமும் சிங்கமும்
வாழ்விலே உயர்ந்தோங்க,
மகிழ்வுடன் நாட்கள்
உம்முடன் இணைந்தேற
அன்புடன் வாழ்த்தினோம் 
நட்புடன் யாம்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் இருவருக்கும். 🌹🌹🙌🙌

-- 
இவண்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


Dhavappudhalvan Badrinarayanan A M ''அங்கம் நொந்து தங்கம் தந்தவள்.
எந்தன் மனையாள் சிங்கம் ஈன்றவள்.''


நோகமல் பேறில்லை.
#நோந்த வனை பயனில்லை.
நோவின் வலி தாயறிய
நொந்ததின் பொருளிதுவே.

#நோந்த வனை = நொந்து+அவனை (இறைவனை)
-- 
நட்புடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏
Reply
1
1 hr
Manage
Anuradha Kattabomman அங்கம் நொந்து தங்கம் தந்தவள். -- கொடி கழுத்தைச் சுற்றி விழுந்து இருந்ததால் 2 நாள் சிரமத்திற்குப் பின் சுகப் பிரசவத்தில் பிறந்தவள் பெண் தங்கம். ஆண் சிங்கம் அவ்வாறில்லாமல் மருத்துவமனையில் சேர்த்தவுடன் சுகப் பிரசவத்தில் பிறந்தவன். அதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறேன்.
Reply
1
1 hr
Remove
Dhavappudhalvan Badrinarayanan A M நோவுக்கு காரணமான கொடி கழுத்தை சுற்றி இருந்ததும் இறைவனின் செயலே. அந்த இறைவனையோ, தங்கத்தையோ நோவதில் ( எடுத்து கூறிக்கொண்டிருப்பதில் ) பயனில்லை என கொள்க. 😍🙏

No comments: