சுணக்கம் கொள்ளும்
என் உடலியக்கம் போல
#என்_அலைப்பேசியும்
=====================
அறுக்க முடியாது
அந்தரத்தில் விட்டாலும்.
#பெற்றெடுத்த_உறவு
=======================
முற்றும் துறந்த நிலையிலிருந்து
முற்றும் துறந்த நிலையடைந்தான்
=================================
உன்னிலே அவன் மயங்க,
உருக்கொண்டதந்த மூக்குத்தி.
உறுதியாய் அன்று நீ தடுத்திருந்தால்,
உனக்கு இன்றவன் கிடைத்திருப்பானோ? 








==================================================
வே்ங்கையாய் நீயிருக்க,
பாய்வதை தடுத்திடுமோ
வேலிகள் இடையிருந்து. 


==============================================
உயிரோ உடலை விட்டு பறக்கயிருக்கு.
உள்ளங்கை அரிப்பெடுக்கிறது அந்நேரத்திலும்.
--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment