Translate

Wednesday, October 11, 2017

குறுங்கவிதைகள்



இருப்பவனுக்கும்
இல்லாதவனுக்கும்
இருப்பதில்லை
#தூக்கம்

====================
அஞ்சறைப்பெட்டி
குறைந்தாலும்
மாறாது கைமணம்

#தாய் பாசம்

======================

அவரைப் போலவே
அவருடய பொருட்களும்

#கவிழ்ந்து கிடக்கிறது.

=========================

காலணியை காட்டிய போது 
கதை ஒன்று புதிதாய்.

#புரிந்து கொண்டான்

=============================

வசதி பார்க்க
வந்து சென்றது
வெளியிலிருந்து எலி.
#குடியேற 

-------------------------
வசதி காண 
வந்தது  எலி.
#குடியேற 

--------------------

வந்தது
பார்த்தது எலி.
#குடியேற 


-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: