Translate

Thursday, October 26, 2017

ஏன்? ஏன்?



இயலா நிலையை ஏன் நினைத்தாய்?
இருக்கின்ற நிலையை ஏன் மறந்தாய்?
நட்பை உறவாக்க ஏன் துடித்தாய்?
கற்றிருந்தும் ஆராயமல் ஏன் துணிந்தாய்?


-- 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


கற்றறிந்த ஞானியார் 
குற்றம் பல புரிந்தனர் 
பட்டு தெளிந்த பின்னே 
ஞானமங்கு வந்தது 
இயலவில்லை என்றிருந்தால் 
இருப்பதென்ன ஆவது 
நடப்பதெல்லாம் நன்மைக்கே 
என்று இறைவனிடம் செப்பிடு




ஆயகலைகள்
அறுபத்து நான்கினையும்
கற்றறிந்த

காவியமே
கவிமணியே
கற்பனையே..

மெத்தப்படித்தாலும்
முகமூடிக்கிழிந்தாலும்..
நிறைகுடமாம்
நீயிருக்க...
குறை பிறையாய்
வந்தவரை
இறையே நீர்
கற்பிப்பீரே....
நட்பென்றால்
உடுப்பில்லை
உப்பில்லை
உடுத்தியதை
உறித்தெரிய
உணவையும்
உண்ணாதெரிய
கற்ற கனவான்கள்
காண்பதெலாம்
கற்பனையோ?

நிறைகுடத்தமிழ்ச்சங்கம்...
நீங்களுமுதறலாமா ?
நாற்றுதான்
நாங்களுமே
நாற்றாங்கால்
அழிபடவா?
வாழ்த்தி வழிநடத்தி...
வழியதைக்
காட்டிடுங்கள்.

கைகளைத்
தோளிலிட்டு
கவிக்கதை
காட்டிடுங்கள். .

வாழ்த்துவோம்
வாழ்த்திக்கொண்டே
வாழ்ந்திடுவோம்
நன்றிகள் நட்புறவே...
இவண்
இரா. செல்லையா



No comments: