Translate

Sunday, October 29, 2017

பொறுத்தருள்க.- இனிய நாள் நல்வாழ்த்துகள்

சீர்க்கெட்டதே உடலுடன் உள்ளமும் தான்.
அன்பான தமிழாலே
அருமையான சொற்களில்
அளவின்றி கருத்துகளை
அழகான கவிதைகளாய் 
அள்ளித்தெளித்த நட்புகள்
ChelliahKothai Subbiah
இருவருக்கும்
இன்முகமாய் 😊
ஓரிரு சொற்கள் எனினும்
நன்றி
நவிழ்தல்
நாகரீகமுடன்
நற்பண்புமாகுமதை
நா(ன்) மறந்ததேனோ?
கரங்களை கூப்புகிறேன் 🙏
கண்ணிய
கனவான்களே பொறுத்தருள்க.
இனியநாள் நல்வாழ்த்துகள்
நட்புகள் அனைவருக்கும் 🌹
--
நட்புடன்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Comments

ஏனிந்த நன்றி ஐயா 
செப்புகின்ற நற்றமிழ் வாயிலாக 
நல் தோழமைகள் பெற்ற மகிழ்வே
சிறப்பான வார்த்தையும் 
சொல்லாடலும் புனையும்
கவி செல்லையா அவர்கள் 
சிறந்த படைப்பாளி 
மலைக்கும் மடுவிற்குமா 
ஒப்பீடு நட்பாய் ஒரு தோழன்
தோன்றியமைக்கு ஆத்மார்த்தமான 
நன்றிகள் பத்ரி அவர்களே,,
தவறேதும் உளதோ எம் வார்த்தையில் 
பொறுத்தருள்க ,,,


சொல்லாடல் மகிழ்வை தரும்
சுவையாயின் ஊக்கம் தரும்.
ஊடல்கள் தாக்கம் தரும்.
நட்பது உரிமை தரும்.
உம் சொல்லில் தவறில்லை
நானுமதை காணவில்லை. 🌹😍 


தமிழுக்கே
இனிமையுண்டு
தமிழ்ச்சொல்லே
தாய்சொல்லெமக்கு...
மீனாட்சி மதுரையிலே
சொல்லாட்சி
தமிழாட்சி...
சொல்லாட்சியில்
சுகமேவுண்டு
சோகமில்லை
சொல்லாட்சியிலே..
சுவையுண்டு
சொர்க்கமுண்டு

ஊதிப்பெரிதாக்கி
உயர்ந்திடவோ
வாய்ப்புமில்லை

நட்ப்பின் சான்றிதழும்
நாடிவரும் நேரடியாய்...

தொட்டாச்சிணிங்கி போல...
துவண்டு நாமும்
போவதுமேன்?

கற்றது நான் கையளவு...
நிற்பதும் நான்
கற்றளவே.

ஊடலே தேடிவரின்..
ஊள்வினை
யாரறிவார்...
ஊடலும்
ஊக்கம் தரும்
உயரிடமும் தேடித்தரும்...

நட்பே கற்பென்றால்
நானதைத்தேடவில்லை!!!

தட்டித்திருத்துரவன்..
கட்டிப்பிடியென்றார் கவியரசு..
எட்டியுதைக்கலாமோ...
சுட்டிப்பையன்
சூத்திரத்தை?

சொல்லியதில்
சோகமில்லை
தோல்விகண்ட
என்னறிவில்..
எள்ளி நகையாட
எள்ளளவு என்னிலில்லை..

உலகு பருத்தாலும்..
உத்திரத்துக்காகாதே...
பருவம் முதிர்ந்ததாலே
பாவமெனக்கு
பாதிப்பில்லை...

தேடுகிறேன் தேன்கூடூ...
தேனெடுத்துப்
பாடிவைக்க..
நாடினேன் நட்புதனை..
நானுமதைக்
காணவில்லை!!!

கவிஞரின்
அழகிய
வழிதேடி
ஓடுகிறேன்
நாள்தோறும்...

சாமான்யன்
இரா.செல்லையா...
30.10.2017
(23.40 மணி )


Chelliah இன்னும் பல சொல்லிருக்க
நானுமதை உமக்களிக்க,
விழி வழியே பார்த்திருந்து
அறிவு வழி நீருணர்ந்து,
சுவையாக உருவாக்கி
சொட்டு சொட்டாய் எமக்களிக்க,
ஆஹா... ஆஹா....
என்னயினி நான் சொல்வேன்.
நன்றி தவிர எது நண்பரே. 😂😍








கவி அறியேன்
கவி நடை அறியேன்
சொல்லறியேன்

சொல் நடை அறியேன்
கவிதை படிக்கும் 
ஆர்வம் மெத்த உண்டு 
ரசிப்பேன் வியப்பேன்
புகழ்ந்து வாழ்த்த 
வகையறியேன்
பக்தியில் கண்ணப்பரை 
போன்றே நானும்
இங்கே 
வாயுள்ள ஊமை நான்...😒😒😒

இதுதான் வேண்டுமம்மா.
நினைப்புகளை நீயெழுது.
தள்ளாட்டம் அதுக்கின்றி
தானாக தலை நிமிரும்.
இந்நடையே அழகம்மா.
வாழ்த்துகள் உனக்கம்மா
வாரி நான் பொழிந்தேனமா.🌹🌹🌹🌹🌹

நட்புடன்,
தவப்புதல்வன்.



Reply
2
9 hrs
Remove


உடல் உபாதைகள்
உறங்குமிடும்
உள்ளந்தானோ?


சீர்கேடும் சிறந்திடுமோ
சிற்றருவியென்
சிற்றறிவிற்கு !!!

கோதைத்தமிழருவி...
குறைவில்லா
குறள்வழியில்
கோடிட்டுக் காணும் அம்மை
குறைநிறைக்
காண்பதிலே 
கொடிகாட்டும்
கொள்கையம்மை...

நாகரீகம் பாராட்ட
நாங்களென்ன
நற்கதிரா ?
போதிமரம்
போற்றலென்ன
பொதிகையே
பொய்கைய்யே

நற்பண்பபின்
நெற்க்கதிரே
நாங்களுங்கள்
நட்புகளே !!!
வெற்றித்தமிழிங்கே..
தலைசாய்த்துக்
கோணலாமா ?

நானென்ற மமதையோ
நானுரைப்பேன்
இல்லையென..

நா (ன் )என்றும்
சுட்டதில்லை..
நாவறியும்
கண்ணியமது

தமிழின் தனவானே
தவிர்த்தெம்மை
ஒதுக்காதீர்...
தமிழின் கனவுலகே
தமிழெம்மை
தக்கவையும்

தேடிவந்திட்டோம்
தேன்தமிழே
தெள்ளமுதே
நாடி வந்தவரை
ஓடிவந்து 
காத்தருள்வீர்.

சிரங்களைய்
தாழ்த்துகிறோம்
சிகரமே
பொருத்தருள்வீர்

வாழ்த்துகள்
வந்த பின்னே
வருத்தமும்
ஏன் எமக்கு ?
கனவானன்
காப்பதனால்
கவலையில்லை
இனியெமக்கு..

உடலும் உள்ளமுமே
உறுதியாய்
உடனிருக்க
உமக்காய்
வேண்டிக்
கொள்வோம்.

உளமாற நன்றிகளோ
உமக்குண்டு
என்னாளும்..!!!
வாழ்க தமிழ்
வளர்க கவி
வாழ்க நட்பு !!!!

தவிக்கும் தம்பிரான்..
இரா.செல்லையா..


😒

🙏






No comments: