Translate

Sunday, October 29, 2017

இருப்பவர் யார்?* - இன்றொரு தகவல்

*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!
டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,
“சார் பின்னாடி போய் உட்காருங்க.
நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.
தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.
என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!
*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*
*சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*
*சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*
*இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*
எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,
உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*
*உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா?*
*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*
*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*
எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.
*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*.
*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*
*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*
*உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*
எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.
*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*
யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.
*தீதும் நன்றும் பிறர்தர வாரா.
-படித்ததில் பிடித்தது.



எதார்த்தமான
எண்ணச்சூழலின்
எதிர்மறையில்லா

எடுத்துக்காட்டு
காரோட்டி...அருமை...
அதிவேக முன்னெடுப்பில்
அக்கரையேதான்
பின்னோக்கி
விரட்டுகிறதோ?
வெற்றுடலையும்கூட
வெட்டியான் சுடுகையிலே
விரல் வீக்கம்
பார்ப்பதுண்டே
வீழ்ந்தவன் வாழ்தவனென்றால்
வசூலுக்கும் கனமுண்டு..
வீழ்ந்தவன் வெறும் பயனென்றாலோ
விசனத்திலே
வீழ்வதுமுண்டே

ஓட்டப்பந்தயத்தில்
ஒத்தவர்கள்
ஒவ்வாதாரென்றால்....
ஓடி ஜெயிப்பவனும்
ஒருவன்தானே!!

சகமனிதனை சலித்து வைத்து
சண்டாள முயல்போல
சண்டியாகலாமோ

தன்னைத்தான்
நினைக்க...
தாழ்வின்றி முன்னிற்க...

இடித்துரைத்தும்
எடுத்துரைத்தும்
எத்தனையோ
போராட்டம்..
இம்மியுமசையாத
சாம்ராஜ்யம் ..
யார் படைத்தார்?

வணிக ராஜ்யங்கள்
வானுயறப்பறப்பதற்கு...
எடுத்துக்கொடுக்கின்ற..
எந்த மா( மோ) டி வீட்டுக்காரன்?

எறும்பாயுழைத்தவனும்..
என்றுமுள்ளம்
தடித்தவனும்
ஏரிட்டுப்பார்ப்பதுவும்
எண்ணிக்கொண்டோடுவதும்..
பிழைப்புமட்டுமன்றி..
பிறன் குரலைக்கேட்டதுண்டா..?

கையூன்றி காலூன்றி..
மண்டியிட்டு
மண்டையூன்டி
மாயா ஜாலவித்தை
மடையவிழ்த
மாண்புகளும்
நம்மிடையே
நடந்தவர்கள்
நம்மைவிட்டும்
விலகியதுமேன்?

சுக்கிலமே சூத்திரம் போல்
சுகவாச உடல்பேணி
உயர்வதேயன்றி
உண்மை உரைப்போமா
" ஒருவனையும் 
நம்பாதே.."

இந்தவரம்தந்த
எவனோயிவனே
என்று..
எடுத்துரைப்பீர்
எங்கள் முதுக்கவியரசே!!!

நானிட்டவரிகளிலே...
கல்லுண்டு..
கள்ளில்லை!!!
முள்ளுண்டே
முறனில்லை..

இப்படிக்கு
தயவில்லா
தம்பிரான்...
இரா.செல்லையா.


No comments: