உள்ளங்கை அரிப்பெடுக்க,
உடைவாளை எடுப்பேனோ?
உறைக்குள் போடுவேனோ?
உரைப்பீரே நீரெமக்கு.
உங்களில் ஒருவனாய்
உங்களுடன் கதைப்பேச
உரிமையெனும் நட்பிருக்க,
உங்களைத்தான் அழைத்தேனே.
ஊர் பக்கம் நாமும் தான்
ஊர்வலமாய் சென்று தான்
உற்சாகமாய் கழிக்கத்தான்
உறுதி செய்ய நினைத்தேனே.
உவ்வகையுடன் செவி மடுத்து
உவமையுடன் கதை பேசும்,
உல்லாசப்பொழுது தான்
ஊக்குவிக்கும் நம் செயலைத்தான்
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் நண்பர்கள் அனைவருக்கும்.









--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
#பதிவிடுவதில் தவறவிட்டு விட்டேன்
No comments:
Post a Comment