Translate

Saturday, October 21, 2017

சுயம்! சுயம்!! - 1

சுயமாய் பிறப்பில்லை
சுகமான வளர்வில்லை.
யார் யாரோ கைப்பிடிக்க
மெல்ல நான் நடைப்பயில,
கற்றதும் சுயமில்லை
அனுபவங்கள் பட்டிருந்தும்
அதில் பல
அணைத்தெமக்கு  ஊட்டவில்லை.

வெகுளியாய் நான்
வெள்ளேந்தியாய் இதுவரை.
இனியும் தொடருமோ
இறைவனே சாட்சியாய்.

கற்றது சிறுந்துளிகள்
கை விட்டதோ பெருந்துளிகள்.
ஒட்டிக் கொண்டது நூலிழையாய்
அது தாயின் ஓர் அனுமானம்.

ஊனமது ஆனபின்னே
உயிர்ப்பிக்க முடிவெடுத்து,
முக்கியெடுத்தார் மருத்துவத்தில்
முழுமையாய் எனையாக்க.

எழுத்தோ ஆழமாய்
எம் தலையில் பதிந்து விட,
சிறிதாக சலுகையவன்
எழுத்திலே மாற்றமிட்டு
கொடுத்தானே இந்நிலையை.

தொட்டதே போதுமென.
கோளுடன் நடை பயின்றேன்,
அறிவெனும் ஆற்றலடைய,
அனுகிரகம் அளித்தாலும்
அந்த வழி புறந்தள்ளி
ஏமாற்றி எனை கொன்றேன்.

விட்டு விட மனமின்றி
வழிய வந்து எனைக் கொண்டான்
தமிழுருவில் நடைப்பழக.

நல்லதோ கெட்டதோ நான்றியேன்
நவிலும் நாவுக்கு சூடுகள் பல கிடைக்க,
பழகிடுவேனோ இனியேனும் புது வழியில்
தங்க தமிழன்னை துணையுடனே.

வாழ்க்கை நிலை முடிவினிலே
வந்துறையும் நேரத்திலே,
வார்த்தைப் போரைத் தவிர்த்து விட்டு,
வாழ்த்துரையில் மகிழ்ந்திருப்பேன்.
வஞ்சனையின்றி வாசமாக
வாரி வழங்க அருள் கிடைத்தால்.

வயதான இக்காலமது
வதங்காமல் 
அடைய வேண்டும்
இறுதியதை.

-- 
என்றும்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


Chelliah Very nice...
congrats frnd
See Translation


LoveShow more reactions
Reply
1
36 mins
Remove
Dhavappudhalvan Badrinarayanan A M நல்லதொரு பொழுதினிலே, 
நயமான வாழ்த்துரைத்த, 
நட்புக்கு, 

நாளையொரு புது விடியல், 
நலமாய் துவங்கிட, 
நல்வாழ்த்துகள் கூறி யான், 
நன்றியுடன் 
எமது இரவு வணக்கம். 🙏🙏

-- 
நட்புடன்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


LikeShow more reactions
Reply28 mins
Manage
Chelliah விடியலுக்காய்க்காத்திருக்கும்...
இரவென்ற
பெயருண்டு..
விரட்டிவிடும்
செங்கதிரோன்...
சிரமுயற்த்தி
வருகையிலே...
குருவாய்த்துதித்திடவே..
வரட்டும் விடியல்...
இரவுக்கும்
என் வணக்கம்
இனியவரித்
தோழனுக்கே
வாழ்திட்டேன்...
வானுயிரச்சேர்த்திட்டேன்... 
வான்புகழ
உன்வரிகள்..
நன்றி....
பத்ரியாரே


No comments: