சலசலக்கும் சிற்றோடையாய்
சங்கீதமாய் உன் வாழ்க்கை,
சேர்ந்தணைக்கும் உறவாலே
சேரட்டும் என்றும் மகிழ்வுகளே.
இறை தந்த ஆற்றலெல்லாம்
இசையாய் பரிமளித்து
ஈனும் வெற்றிகளால் - மனம்
இன்பமாய் சிறகடிக்க
கண்ட கனவுகளும்
காணும் காட்சிகளும்
களிப்பை நல்கிட - ஸ்ரீ
காமாட்சியை வேண்டினோம் உனக்காக.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மகளே.
சங்கீதா பரணிதரன் - 08/06/2015
No comments:
Post a Comment