ஆகாய ஊர்தியாய் நினைத்து
தரையில் ஓடுவது ஆனந்தம்.
வீட்டிலே பூனையாய், தெரியாமல்
தின்பதிலொரு ஆனந்தம்.
ஓடும் நீரிலே - மீனாய்
துள்ளி குதிப்பது ஆனந்தம்.
முத்தோ சொத்தையோ - மூழ்கி
சிப்பி எடுப்பது ஆனந்தம்.
வாத்தி பாடத்தை, புரியாததை
புரிந்ததாய் தலையாட்டல் ஆனந்தம்.
தன் செயலுக்கு, பிறர் அடி வாங்கலும்,
கோள் மூட்டி முழிக்க வைப்பதும்,
உண்டியெடுத்து குறி வைப்பதும்,
ஜடையிழுத்து வேடிக்கை காட்டுவதும் ( பார்ப்பதும்),
ஆட்டத்திலே அழுகுனியாய் -
வாயாடி, வம்புக்கிழுத்தலும்,
அடம் பிடித்து வீம்பு செய்வதும்,
சிறுவயது நினைவுகள்
வரிசையாய் வடம் பிடிக்க
இவ்வயதில் சொல்லுதிர்ப்பது
ஆனந்தத்திலும் பேரானந்தம்
தரையில் ஓடுவது ஆனந்தம்.
வீட்டிலே பூனையாய், தெரியாமல்
தின்பதிலொரு ஆனந்தம்.
ஓடும் நீரிலே - மீனாய்
துள்ளி குதிப்பது ஆனந்தம்.
முத்தோ சொத்தையோ - மூழ்கி
சிப்பி எடுப்பது ஆனந்தம்.
வாத்தி பாடத்தை, புரியாததை
புரிந்ததாய் தலையாட்டல் ஆனந்தம்.
தன் செயலுக்கு, பிறர் அடி வாங்கலும்,
கோள் மூட்டி முழிக்க வைப்பதும்,
உண்டியெடுத்து குறி வைப்பதும்,
ஜடையிழுத்து வேடிக்கை காட்டுவதும் ( பார்ப்பதும்),
ஆட்டத்திலே அழுகுனியாய் -
வாயாடி, வம்புக்கிழுத்தலும்,
அடம் பிடித்து வீம்பு செய்வதும்,
சிறுவயது நினைவுகள்
வரிசையாய் வடம் பிடிக்க
இவ்வயதில் சொல்லுதிர்ப்பது
ஆனந்தத்திலும் பேரானந்தம்
No comments:
Post a Comment