Translate

Thursday, June 4, 2015

சித்திரப் பாடல் - திரு. இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி

இதழ் விரிக்க தேவையின்றி 
மனம் விரித்தேன் தொந்தியானிடம் 
ஆனந்தம் எனக்கருள 

அணங்கு நான், 
தொட்டாள துணை வேண்டி
தொடுத்தேன் பூசாரத்தை.
.

தொடுக்கும் பூஞ்சரமோ 
இவர் கழுத்தில்,
தந்தருள்வான் யான் மனமகிழ 
தகுந்த நல்லுறவை. 

கனிந்த நாட்கள் 
கமழட்டும் நல்லுறவாய் ஐயனே.

-- தவப்புதல்வன்  



இரா. கி ஆஹா தவப்புதல்வரே அருமை. நன்றி




படம்:
நன்றி திரு JayKay Jawahar Kannan with திரு Rajagopalan Srinivasan


''சித்திரப் பாடல்'' இயற்றியது :
நன்றி: திரு. இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி
__________________________________________________
நீ சொல்ல மாட்டாய் எனக்குத் தெரியும்
உனக்குப் பிரார்த்தனைகள்
_____________________________________
அந்திநேர வேளையிலே அழகுசுந்தரியே நீயிங்கு
வந்ததென்ன காரணத்தை மட்டும் விளக்குயிந்த
சுந்தரச் சொர்ணமுகம் சொக்கிமகிழ வருமந்த
சுந்தரனும்யாரு கொஞ்சம் சொல்லு வீடைதீரு
பாதம்வரை பட்டொளிரும் பாவாடைப் பட்டுச்சட்டை
பாவையுந்தன் மேனியில் படருதுசிகப் புத்துணி
கோவையிதழில் கொஞ்சும் கோலப்புன் னகையில்
கோலமிகு வளையல் கொண்டையில் மல்லிச்சரம்
மலர்தொடுக்கும் விரல்கள் வனப்பு வெண்டைக்காய்
கழுத்தில் மணிமாலை காதில் லோலாக்கு
பழுத்தக் கனியாக பளபளப்பு பளிங்குமேனி
மங்கயுந்தன் எழிலில் மனதும் மயங்குதடி
சிந்தனைக்கு நேரமில்லை தன்னந்தனியேவந்து
குந்தியிருந்து யிங்கு கையில் பூத்தொடுத்து
அந்தியிலே சாமிவரம் அன்றாடம் கேட்கிறாயே
பந்தியோடு சிந்துபாடப் போவதாரு சொல்லு
சந்தியிலே இருக்கின்ற சாமிகணபதியும் மனமகிழ்ந்து
உந்தனது வேண்டும் வரத்தைத்தர இதழ்விரிப்பாய்

============================================

இப்பாடலை ரசித்து இட்ட கருத்துக்கள்:



Kalam Shaick Abdul Kader: பாவாடை தாவணியில் பார்த்த உருவமதை பா வாக்கித் தந்து, பாவாக அருந்த வைத்தீர்!


Shyamala Rajasekar நந்தவனப் பூப்பறித்து நாரிலே கட்டியதை 

சுந்தரவி நாயகனின் தாளிலே சூட்டிடுவாய் 
கந்தனின்ச கோதரனும் காத்தருள் செய்திடுவான் 

தந்திடுவான் வேண்டும் வரம்.


இளஞ்செழியன் பழனி சென்டுமல்லி சரந்தொடுத்து..
கொண்டு வந்தே
கழுத்தில் போட...

கழுத்திலொரு தாலி விழுமா...
கண்டு சொல்லு கணபதி நீ!
முந்தா நாளு வந்துபோன
மவராசன் மடலில்ல...
கடுதாசி போட்டானா...
தபால்காரன் மறந்தானா...
பூதொடுத்தேன் புள்ளாரே!
செவ்வா வெள்ளி கணக்கா
நடையா நடக்குறன்...
ஒவ்வாத மாப்புளைய எங்கிட்ட காட்டாத...
கொணமுள்ள சீலனாட்டம்...
அய்யானார கணக்கா
வீரனாட்டம் கண்டு
சொல்லு புள்ளாரே!
கொஞ்சநாள் போச்சுதுன்னா...
மனம் ஒம்பக்திக்கே நேந்து போகும்...
கண்டு சொல்லு புள்ளாரே...
எனக்கட்டும் வீரனெவன்
கண்டுசொல்லு புள்ளாரே?



இரா. கி ஆஹா தவப்புதல்வரே அருமை. நன்றி

No comments: