சின்னதாய் ஓலைக்குடில்.
தொழுவத்தில் சிவப்பு பசு.
தென்னையிடை சிரிக்கும் நிலா
காதருகே மெட்டிச் சத்தம்.
காளையின் காதல் எல்லாம்
கண் வழி எட்டிப் பார்க்கும்.
பெண்ணிவள் நெஞ்சுக்குளே
பரவசம் பாய் விரிக்கும்.
வாழ்க்கை, இதுதான்.
அரசாங்க பச்சை நோட்டும்,
அடுக்கடுக்காய் பேரும் புகழும்
பத்தடுக்கு மாளிகையும்
மாலையும் மேடையும் - தான் (நான்)
காலடி தூசு என்பேன்.
அட போ....
ஆயிரம் பேசியென்ன
மோதலில் அழியும் உலகம்
காதலில் அழிந்தாலென்ன?
நன்றி: படைப்பாளிக்கு
படித்தேன் ரசித்தேன்
எழுதியது யாரோ!
கருத்துரைகள்:
No comments:
Post a Comment