Translate

Sunday, July 22, 2007

அவளா ???...... இவள் !!!!!.......

நான் பிறந்ததைச் சொல்லவா ?
வளர்ந்ததைச் சொல்லவா ?
விழிகளில் விழுந்ததைச் சொல்லவா ?
காதல் மலர்ந்ததைச் சொல்லவா ?

அவளுடன் கழித்தைச் சொல்லவா ?
காதலுடன் கொஞ்சியதைச் சொல்லவா ?
சுற்றித் திரிந்ததைச் சொல்லவா ?
உலகை மறந்ததைச் சொல்லவா ?

உறவுகள் பிரிந்ததைச் சொல்லவா ?
உறக்கம் தொலைந்ததைச் சொல்லவா ?
சொல்லி விடுகிறேனே முதலில்
என் காதல் தோல்வியை.

நிலையற்ற நினைவுகளால்
சுற்றி வருகின்றேன்
நாங்களாய் இருந்து
நான் மட்டுமாய் இன்று.

சந்திக்கும் நேரம் தாமதமானால்
துடித்து துவழ்பவளா, இன்று !
கொஞ்ச செய்து, கெஞ்ச செய்து
தவிக்க விட்டவளா, இன்று !

சிரித்து, சிரிப்பூட்டி
சிரிக்கச் செய்தவளா, இன்று !
நேரங்கழித்து விடைப்பெற்றாலும்
வாட்டமடைபவளா, இன்று !

கண்கள் கிறங்க,
உடலைத் தழுவி,
கழுத்தை வளைத்து,
உதட்டைத் தேடி,
முத்தம் கொடுத்து,
கிளர்ச்சி ஊட்டியவளா,இன்று.

என்னுடை சிறிதே கசங்கினாலும்
வருந்துபவளா, இன்று !
கணநேரமே பிரிந்தாலும்
கண்ணீர் விடும் அவளால்,
கிழிந்த உடையாய், கலைந்த கோலமாய்
என் நிலைக்கு காரணமாய் இன்று.

அன்றொரு நாள், அவளோ
காத்திருக்க வைத்தாள்.
காலம் தாழ்த்தி வந்தாள்.
மகிழ்வுடனே சொன்னாள்.

வெளிநாட்டு மாப்பிள்ளையாம்,
கை நிறைய சம்பளமாம்,
சுகமான வாழ்வாம்,
இது அவள் இலட்சியமாம்.

அழைப்பிதழ் வந்திடுமாம்
வந்தவுடன் தருவாளாம்
என்றும் என் நினைவாக
பரிசுப் பொருள் தரச்சொல்லி,
கூறி விட்டு அவளும்
சென்று விட்டாள் விரைவாக.

படிப்பிருந்தும் வேலையில்லை,
வருவாயிக்கு வகையில்லை,
வாழ்க்கைக்கு வசதியில்லை,
இன்றுள்ள என் நிலையை,
சொல்லாமல் காட்டி விட்டு
அகன்று விட்டாள் அங்கிருந்து.

என் நிலை தெரிந்தாலும்,
கருத்தை அவள் கேட்கவில்லை.
என்னுடன் சேர்த்திணைத்து
கோட்டையைக் கட்டியவள்,
இன்றோ கட்டிவிட்டாள்
எனை வைத்து சமாதியாய்.
ஆனாலும் கற்பைக் காத்தேன்
அவளிடம் நான்.


No comments: