Translate

Tuesday, August 14, 2007

இந்திய சுதந்திர தின வைரவிழா வாழ்த்து.-2007

சுதந்திரத்தை
நீ அடைய
காணிக்கையாய்,
தமை அளித்தார்
முத்துக்களாய்
நீ அணிய.

அணிந்த நீயும் பெருமைக்
கொள்ளும் நேரத்திலே,
உமை சிறுமைப் படுத்த
சிலர் நுழைந்தார்,
போலிகளாய்.

முத்துக்களால் பளப்பளத்த
நீயும் இன்று,
பொழிவிழந்து இருக்கின்றாய்.
உன் அழகு
என்றென்றும் நிலைத்திருக்க
பக்குவமாய் போலிகளை
களைந்து விடு.

காலத்தின் வேகத்தால்
துண்டுகளாய், மீண்டும்
நீ உடையாமல்,
உமைக் காக்க
எமக்கருளைத் தந்துவிடு.

பெற்றெடுத்தத் தாயை
முதல் நினைத்தோம்.
வாழ்வளித்த
உம் பாதங்களை
யாம் பணிந்தோம்.

கருத்துக்கள்
பலவாறு
தானிருக்க.
அத்தனையும்
வெளியிட
இடங்கொடுத்தாய்.

அன்று கூறுகளாய்
சிதைந்திருந்த உனைத் தானே
ஒன்று சேர்த்து
அழகு பார்த்தார்
சித்தர்களாய்.

இன்றோ நிலைக்கெட்ட
மனிதர்களால்,
உனைத்தானே
கூறுப்போட நினைக்கின்றார்
சிதைத்துத் தானே.

அஞ்சி அஞ்சி சாகின்றோம்
நடக்கின்ற கொடுமைக் கண்டு.
அஞ்சாமல் செய்கின்றார்
தமை மட்டும்
மனத்தில் கொண்டு.

உலகுக்கே பாடங்களை
நீ கொடுத்தாய்.
நீ கொடுத்த பாடங்களை
என்றுதான்
புரிந்துக் கொள்வார்.

பட்ட காலில் மீண்டும்
படுமென்பாரம்மா.
அந்த வேதனை மீண்டும்
எமக்கு வேண்டாமம்மா.

எத்தனையோ இன்னல்கள்
இடையிடையே வந்தாலுமே,
உனை சிறுக சிறுக
அழகு படுத்தி வருகின்றோம்.

சிறு அழகு பெற்றிட
ஆண்டுகள் அறுபதாமே,
நீ பேரழகு பெற்றிட
எத்தனை நாளோ.

உமை நினைத்து, நாங்களும்
பெருமைக் கொண்டு,
தொடர்ந்து நாங்கள்
மகிழ்வுடனே இருந்திடவே,
என்றும் நீயும்
சுதந்திரமாய் இருந்திடுக
என்றே நாங்களும்
வாழ்த்திக் கொள்வோம்
வாழ்த்துகளை,
எமக்கு நாமே.

No comments: