Translate

Monday, September 18, 2017

பண்பாட்டில் இதுவொன்று




பாரதத்தின் பண்பாடாய் 
பருவத்தில் கரையேற்ற 
பண்புடை நாயகனை
பலவாறு சோதனையிட்டு 
பகுத்தறிந்து தேர்ந்தெடுத்து 
பரிசமிட்டு முடித்தனரே. 


பக்தியுடன் காலில் விழ 
பாசமுடன் எனை எழுப்பி 
பரவசமாய் கட்டித் தழுவி 
பாற்சோம்பை கையிலிட்டு 
பாந்தமாய் உள்தள்ளி 
பண்புடன் ஒதுங்கி கொண்டார்.

பாலும் பழமும் கை மாற 
பகிர்தலுடன் தொடக்கமாக 
பரிவுடன் கைப் பிடித்து 
பக்கத்தில் என்னை இருத்தி,
படர விட்டார் விழிகளை 
பாவையெனை  கிறக்கமாக.

பருவத்து என் வனப்பெல்லாம் 
பசலையுடன் காத்திருக்க 
பஞ்சனை மேல் பஞ்சனையாய் 
பாங்குடன் எனை விரிக்க, 
பண்புடன் தொடங்கியது 
பார் புகழும் இல்லறமும்.

பலமான விழுதுகளுடன் 
பசுமையான வாழ்வமைக்க 
பல நல திட்டங்களுடன் 
பரந்து விரிந்த கனவுகளுடன் 
பகற்பொழுதும் விடிந்து விட .
பல்சுவை உறவுகளாயாய்
பல்கி நாளும் பெருகியதே
பற்றுடைய குடும்பமாய்.


-- 
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: