Translate

Monday, September 18, 2017

பட்ட சூடு


பாழும் உணர்வை தூண்டி விட்டு,
படுக்கையாய் என்னை விரித்து விட்டாய்.
பகிர்தலில் இது அங்கமென - அப்
பாவியாய் நானும் மலர்ந்து விழுந்தேன்.
பசிக்கொண்ட வேங்கையாய்
பாய்ந்து நீ குதறி விட்ட நிலையால்,
பல விதைகள் இணைந்து இன்று
பலமுடன் உருவொன்றுக்கொள்ள,
பயனுள்ள நிலமோ
பாழ்பட்ட நிலையை
பட்டென உணர்ந்தேன்,
பருவமாற்ற மக்கைக்குறியால்
பலப்படுத்த நினைத்து
பாதையை வகுத்தேன்.
பறந்து விட்டாய் - புதியதொரு
பாதையில் மறைந்து நீயும் .
பார்த்திருந்த எம் விழிகள்
பசையற்று காய,
பசலையால் நானும்
பலவீனமடைந்தேன் நாட்கள் தேய
பார்க்கும் பார்வைகள்
பற்றியெனை எரிக்க
பறந்து வந்து கைப்பிடிப்பாயென
பற்றியிருந்தேன் நிலையை நிலையாய்.

--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

#ஒரு கருவை வைத்து பல கவிதைகள் புனையலாம் என்பதற்காக, ''வைபோகமே'' என்ற கவிதையின் கருவை வேறு வடிவில். தொடர்ந்து எம் கவிதைகளை வாசித்து ஆதரவு அளித்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. வணக்கம். 

No comments: