Translate

Friday, September 15, 2017

பாதி வழியில்



பச்சை ஆடையுடுத்தி
பச்சரிசி பல் மினுமினுக்க ( காட்டி )
பவளமல்லி கொடி போல
படர்ந்திருக்கும் நின் நிலை கண்டு
படபடத்து துடிக்குதடி எம்மனசு
பட்டாம்பூச்சி நிலையாக.
பறித்துக்கொண்ட என் மனதை
பரவச உணர்வோடு
பாட்டுக்களை மகிழ்வாக
பாடி நீ, பாசமாக
பாதுகாத்து வைத்திடுக
பட்டுப் போன்ற உன் மனத்தில்.
பாசங்கொண்ட என் நினைவில்
பழசெல்லாம் உருளுதடி
பாவை உன் வளர்ச்சியெல்லாம்
பசுமையாய் இருக்குதடி.
பல கதைகளை சொல்லுகிறாய்
பல நினைவுகளில் துள்ளுகிறாய்.
படபடக்கும் இமையுடன்
பக்குவமாய் ஒதுங்கி நின்று
பார்வையை ஓட்டி நீ,
பதுமையாய் நின்றபடி
படபடக்கும் மனதுடன், எனை
பக்கம் வர செய்கிறாய்.
பாதியாய் பங்கிட்ட
பலகார இனிப்பெல்லாம்
பல்லிடுக்கில் மாட்டிக்கொண்டு
பரிகசித்த நினைவெல்லாம்
பரபரப்பாய் ஓடுதடி,
பகலிரவு நேரமின்றி.
பறந்து பறந்து ஓடியாடி
பசியடைந்த நேரமதில்
பசும்புல்லில் படுத்து விட,
பாகனாய் நீயிருக்க
பக்குவமாய் உனை சுமந்து
பறந்தது ஒரு காலமடி.
பந்தியிட நிறைவாக
பருவத்தில் நீயிருக்க
பரிசமிட நாள் பார்த்து
பரிதியுடன் நான் காத்திடுக்க,
பரிசோதனை செய்கின்றனர்
பாதி வழியில் மறைத்தபடி.
--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

பாதிப்பு: வாழ்த்துக்கள் குழு 15/09/2017
https://www.facebook.com/groups/1678106432499138/?multi_permalinks=1711477519162029&comment_id=1711587342484380&notif_t=like&notif_id=1505482087462589

No comments: