Translate

Monday, September 18, 2017

வைபோகமே




காதலென தூண்டி விட்டு,
கண்களை மறைத்து விட்டு 
கருவினைக் கொடுத்து விட்டு,
கலங்கிட செய்து விட்டாய்.

கல்யாண வேள்விக்கு 
கருமாதி செய்து விட்டு,
காற்றிலும் வேகமாய் 
கடுகியே மறைந்து விட்டாய்.

கணம், உள்ளும் வெளியும் இரண்டாக,
கண் காது மூக்கு வைத்து 
கதை கதையாய் ஊர் பேச
காட்சி பொருளாய் வைத்து விட்டாய்.,

காலமது விரைந்தோட,
கன்னி நான் கலைந்திருக்க,
கற்புக்கு பங்கமின்றி 
காப்பாற்று என்னை விரைவாக.

கயவனெனும் பெயர் மறைய 
கரையவிருக்கும் எனை காக்க,
காதலதை புனிதமாக்க, காத்துள்ளேன்
கறையகற்றுவாய் என நினைத்து 





-- 
ஆக்கம் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: