Translate

Sunday, September 17, 2017

பழுத்த இலை ஆகும் முன்னே


பட்ட மரம் நானல்ல.
பழுதடைந்த மரம் நான்.
பசுமையை போர்த்திக் கொண்டு 
பச்சையாய் தெரிகின்றேன்.
பட்ட அடிகள் கணக்கில்லை
படர்ந்து விரிய அறியவில்லை.
பகுத்தறியும் அறிவிருந்தும்
பாழும் சிறைக்குள் அடைத்துக் கொண்டேன்.
பசுமையாய் அக்கரை காண்கையிலே
படபடக்கும் எம் இதயம்
படர்ந்துயர துடிதுடிக்கும்
பசுமையாக்க திறனின்றி தவித்தவிக்கும்.
பாடங்கள் அனுபவத்தில்
பட்டங்களில்லை எம்மிடத்தில்.
பரிகாசங்கள் இருந்தாலும், மகிழ்கிறேன்
பாசம் கொண்ட உமைக் கண்டு.
--
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: