Translate

Wednesday, February 25, 2015

வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை



பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

'தேசிய வெளிநாட்டு .மாற்றுத்திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை திட்டம் ' என்ற பெயரில் நடப்பு கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இதன் கீழ் பொறியியல், மேலாண்மை அறிவியல், பயன்பாட்டு அறிவியல், மருத்துவம், வர்த்தகம், கணக்கியல் மற்றும் நிதி, கலையியல், சமுக அறிவியல் மற்றும் கவின் கலை, ஆகிய பிரிவுகளின் கீழ் உயர்கல்வி மற்றும் ஆராச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்புவோர், சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் விண்ணப்பிக்கலாம் என பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து தெரிவித்துள்ளார்.

நன்றி: காலைக்கதிர் சேலம்
கல்விக்கதிர் 21/02/2015

No comments: