உலகத்தை சுமக்கிறான் இக்கோமணாண்டி.
கோமணமே இவனின் ஆடையாண்டி..
உலகத்திலிருப்போர் உயிர் வாழ
உணவளிப்பவன் இவன்தாண்டி.
இவனுக்கு பெயர்தான் உழவன்டி
இருப்பினும்
உணவின்றி இறப்பவனும் இவன்தாண்டி.
வெயிலும் மழையும் இவனுக்கில்லையடி.
இவன் படும்பாடு கணக்கில் இல்லையடி.
மற்றவர் கால்களில் செருப்பிருக்க,
இவன் காலோ சேற்றிலே இருக்குமடி.
வஞ்சமில்லா இவன் உழைப்பினிலே
இயங்குதே உலகம் உயிர்புடனே.
வகைவகையாய் பிறர் சுவைக்க,
வஞ்சினமில்லா கஞ்சியும் கூழும்
இவன் அருந்தும் உணவு தினப்படி..
கவலையின்றி வாழ, பல குடும்பம்
காவடி சுமக்கும் இவன் குடும்பம்.
ஏர் ஓட்டும் இவன் வாழ்வு
ஏற்றமடையுமோ இனியேனும்.
ஏக்கம் களைப்போமோ கைக்கொடுத்து.
என்றுயென உம்மையே கேட்கின்றேன்.
--
ஆக்கம்
✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
🙏
கோமணமே இவனின் ஆடையாண்டி..
உலகத்திலிருப்போர் உயிர் வாழ
உணவளிப்பவன் இவன்தாண்டி.
இவனுக்கு பெயர்தான் உழவன்டி
இருப்பினும்
உணவின்றி இறப்பவனும் இவன்தாண்டி.
வெயிலும் மழையும் இவனுக்கில்லையடி.
இவன் படும்பாடு கணக்கில் இல்லையடி.
மற்றவர் கால்களில் செருப்பிருக்க,
இவன் காலோ சேற்றிலே இருக்குமடி.
வஞ்சமில்லா இவன் உழைப்பினிலே
இயங்குதே உலகம் உயிர்புடனே.
வகைவகையாய் பிறர் சுவைக்க,
வஞ்சினமில்லா கஞ்சியும் கூழும்
இவன் அருந்தும் உணவு தினப்படி..
கவலையின்றி வாழ, பல குடும்பம்
காவடி சுமக்கும் இவன் குடும்பம்.
ஏர் ஓட்டும் இவன் வாழ்வு
ஏற்றமடையுமோ இனியேனும்.
ஏக்கம் களைப்போமோ கைக்கொடுத்து.
என்றுயென உம்மையே கேட்கின்றேன்.
--
ஆக்கம்

தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments:
Post a Comment