Translate

Tuesday, November 28, 2017

முதுமொழிக்கு – புதுக்கவிதை – 2


கூழானாலும் குளித்துக் குடி – முதுமொழி

குடித்து விட்டு வந்தான் மதுவை
குளறியபடி தள்ளாடி நடந்தான்
கூல் குடிக்க மறுத்து அவன்
குரல் எழுப்பினான் பலமாக.

கூழை வெறுத்ததுடன்
குளிக்கவும் மறுத்தான்.
போட்டதால் ஏறிய போதை
பொலபொலவென இறங்கிடுமாம்.

பொறுக்க முடியவில்லை – சாதம்
பொங்கி போடும் வரை.
அதற்குள்
போட இன்னும் பணம் கேட்டு
பொண்டாட்டியை புரட்டி அடித்தான்.

ஆர்ப்பாட்டமாய் அவன் செயலிருக்க
அங்கமெல்லாம் அதிர அவள் அழுதாள்
அதற்கெல்லாம் அச்சராமல்
அடி மேல் அடி போட்டான்.

சேர்த்து வைத்த பணமெல்லாம்
சேலை முனையில முடிச்சிட்டிருக்க
அகப்பட்டது அவன் கையில்
அத்தனையும் உருவிக் கொண்டான்.

பசிப் பொறுக்காமல் அவன்
குளிக்காமலே கூழை குடித்து விட்டு,
மீண்டும் மது அருந்த,
தள்ளாட்டம் குறையாமல்
விசில் அடித்தபடி புறப்பட்டான்.

--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்


A.M.பத்ரி நாராயணன் 🙏

No comments: