Translate

Saturday, November 25, 2017

சென்ரியூ வகை கவிதைகள் -3


அங்கு பெய்யும் மழையின் ஈரம்
காற்றில் கலந்து வருகிறது
இங்கு சுகமான மண் வாசம்

காலத்தில் புரிந்துக் கொண்ட காதல்
பழுதின்றி இதமாய் கனிகிறது
பழுக்க வைத்த முதிர் காய்கள்

அணிந்து சென்ற புது செருப்பு
கடித்து புண் ஆனது
தெரு வழி் சென்ற நாயால்

வீட்டில் மாவு அரைக்கும் இயந்திரம்
தனியொரு சப்தமுடன் இயங்கியது
சுவற்றில் மாட்டியிருந்த பழைய கடிகாரம்.

சிக்கி முக்கிக் கல் இரண்டு
உரசியதால் தீ பற்றியது
தீப்பெட்டி மருந்து பட்டியில் தீக்குச்சி

--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏 

No comments: