Translate

Friday, November 10, 2017

சென்ரியூ வகை கவிதைகள் - 2



சந்தனக்காப்பு அலங்காரம்
தினமும் நடைப்பெறுகிறது
ஏழையின் வாழ்வு போராட்டம்

நெசவாளியின் கட்டுத்தறி
கவி பாடுகிறது
இயக்கப்பட்ட ஒலிநாடா.

சுவற்றுக்கோழி
சப்தமிடுகிறது
தெருவிலொரு குழந்தை

சுவற்றில் நாள் காட்டி
காற்றில் ஆடுகிறது
தலையாட்டி பொம்மை

துணிகள் காய்ந்தது
ஈரமின்றி
கல் நெஞ்சம்

வண்ணப்பட்டம்
காற்றில் பறக்கிறது
கிழித்து போட்ட காகிதங்கள்


--
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன். 🙏

No comments: