Translate

Monday, November 27, 2017

சென்ரியூ வகை கவிதைகள் - 5


காற்றில் அசைந்த மலர்கள் 🌷🌺🌸🏵️🌹🌹
கண்களுக்கு விருந்து அளித்தன
நாட்டிய மங்கைகளின் ஆட்டம் 💃💃

மயிலிலேறி உலகைச் சுற்றினான் முருகன்
மாம்பழத்தின் மேல் ஆசையால்
அம்மையப்பனைச் சுற்றினார் விநாயகர்

தடாகத்தில் நிறைய தாமரைப்பூக்கள் 🌷🌷🌷🌷
இதழ்கள் விரித்திருந்தன
பரிதியைக் கண்ட சூரியகாந்திப்பூ 🌻🌻🌻

கனவில் கண்ட காட்சிகள்
சிலிர்க்க வைத்தன
நேரில் பார்த்த வித்தைகள்

உப்பங்கழி நீர் வெயிலினால்
காற்றில் கலக்கிறது ஆவியாகி
சூட்டினால் இட்லிமாவின் ஈரம்.

--
ஆக்கம்:- ✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன் 🙏

No comments: