காமத்தின் நினைவுகளோ
கண்களை மறைக்க,
கட்டியே இழுக்கிறது
கற்புகளை அழிக்க.
காட்டாற்று வெள்ளமாய்
கரை புரண்டோட,
தடைகளை அகற்ற
தயக்கமின்றி முனைந்து,
குத்தியே கொல்கிறார்
கொலைகளையும் துணிந்து.
அல்லும் பகலும்
அழகு பதுமையாய்
அரிதாரம் புனைந்த
அழகுமையிலாள் செயல்கள் யாவும்
அணைகிறதே இந்நிகழ்வுகளால்.
பாழும் மனமோ
பரவசத்தை தேட,
பலியாகிறாள் விளையாட்டு பொருளாய்
பாவிகளிடம் அவளும்.
ஆணவத்தின் குரலோ
ஆட்டு விக்க,
ஆண்டு விட துடிக்கிறான்
அதிகாரம் செய்து.
அதட்டியே அவளும்
ஆக்ரோசமாய் பாய்ந்தும்
ஆனதே இந்நிலை
அடையாள கறைகளாய்.
தாலாட்டும் நிலையில்
தந்தையானவனும் -
தகாத செயலால்
தறிக்கெட்டு போனவனாய்
தன் வாரிசையே பலிட்டான்
தாரமாய் நினைத்து.
பார்த்த காட்சிகளோ
உணர்வுகளை தூண்ட,
தமையனாய் இருந்தும்
தங்கையென பாராமல்
தயக்கமின்றி ருசித்தான்
தன் தாகம் தீர்ந்திடவே.
அடக்கிவிட துணிந்தவனுக்கு
அடங்கிட மறுத்தாலோ,
அகற்றியே விடுகிறான்
அவள் உயிரை, நொடி பொழுதில்.
காசும் காமமும்
கட்டவிழ்த்து கொள்ள,
காலமும் படுகிறது
கறைகளாய் நிதமும்..
No comments:
Post a Comment