Translate

Tuesday, September 10, 2013

கொலை பாதகர்கள் - செயற்கை பால்



தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் பால் பயன்பாடு அதிகம். எருமைப்பால் தான் அவர்களின் விருப்பம்.

அதற்கேற்றாற்போல் கால்நடைப் பராமரிப்பு செலவுகள் கூடிக் கொண்டே செல்வதால், தேவைக்கேற்ப உற்பத்தியில்லை. எருமைகளும் அதிகளவு பால் சுரப்பதுமில்லை. அதனால் பாலில் கலப்படமும் அதிகம். நாம் அறிந்ததெல்லாம் பாலில் கலப்படம் என்றால் பாலில் தண்ணீர் கலப்பது மட்டும் தான்.

ஆனால் அதைவிட கொடுமை, உத்திரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் அதை ஒட்டிய மாநில எல்லைகளிலும் கலப்படத்தின் புதிய பரிமாணத்தின் வளர்ச்சியாக, பாலே சிறிதும் இல்லாமல், சிந்தடிக் பால் என்னும் செயற்கைப்பாலை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர்.

இந்த பால், தண்ணீர், ரீஃபைண்ட் ஆயில் (சுத்தகரிக்கப்பட்ட எண்ணெய் ), உப்பு, சர்க்கரை, யூரியா, டிட்டர்ஜேண்ட் பவுடர் ( சோப்புத்தூள் ), அத்துடன் கொழுப்பு இருப்பதைப்போல் காட்ட,பாமாலின் ஹோமொஜினைஸ் தொழில்நுட்ப முறையில் சேர்க்கப்படுவதால் இயற்கைப்பாளுக்கும், செயற்கைப்பாலுக்கும் வித்தியாசமே தெரிவதில்லையாம்.

# அறிந்ததும் நெஞ்சம் பதறுகிறது. செயற்கைப்பால் என்பதையே அறியாமல் குடித்து உயிர் விடும் சின்னஞ்சிறு நினைத்தால்....

# இத்தகைய கலப்பட கொடுமைகாரர்களுக்கு கடுமையான தண்டனை என்று வழங்கி கலப்படங்கள் தடுக்கப்படுமோ? ஐயகோ......

# தொழில் முனைவோரே, இப்படியும் வழியிருக்கிறதா என செயற்கைப்பால் உற்பத்தியில் ஈடுபடும் படுபாதக எண்ணத்திலும் செயலிலும் ஈடுபட்டு விடாதீர்கள்.

# இதை வாசிக்கும் வாசிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், இதை செய்யுங்கள்.

# ஏறக்குறைய 10,000 லிட்டர் சிந்தடிக் பால் என்னும் செயற்கைப்பாலை கீழே கொட்டும் கட்சி. பால் கறவை காட்சிகளும்

No comments: