Translate

Monday, September 9, 2013

ஒரே நாளில் இடிந்த சேஃப்டிக் டேங் !

      

தமிழ்நாடு சேலம் மல்லூர் அருகே காந்தி நகர் என்ற இடத்தில் பொதுகழிப்பிடத்திற்கு அருகில் கழிப்பிடக் கழிவுத் தொட்டி ( சேஃப்டிக் டேங்)  கட்டிய ஒரே நாளில் இடிந்து விழுந்தது.

# நல்ல வேளை கட்டி முடித்து கழிவு நிரம்பியபின் இடிந்து விழுந்திருந்தாலோ, கழிப்பிடக் கழிவுத் தொட்டி சுத்தம் செய்யும் போது இடிந்திருந்தாலோ சுகாதார கேட்டுடன் உயிர் பலியும் ஏற்பட்டிருக்கும்.

# இதற்கு காரணமான ஆட்களுக்கு தண்டனையாக, உபயோகத்தில் உள்ள பழைய கழிப்பிடக் கழிவுத் தொட்டியில்  ( சேஃப்டிக் டேங்கில் ) தங்க வைக்க வேண்டும்.



  • Sankar Mani Iyer அவுங்க பாவம் நல்ல தரமான டேன்க் தான் கட்டினாங்க. ஒரு சின்ன நில அதிர்வு. இடிந்து இருக்கும் போல.
  • Dhavappudhalvan Badrinarayanan A M ஆமாம், ஆற்றுமணலுக்கு பதில் கல் குவாரியில் இருக்கும் வேஸ்ட் பவுடர், ஒரு கல் செங்கலில் அரை கல் சுவர், சிமெண்ட் இருக்கிறது என்ற அடையாளத்திற்கு கொஞ்சம் கலவை தயாரித்துக் கட்டினால்? இடிந்து விழுந்ததுமே, அந்த இடத்திலிருந்த மீதியிருந்த கல் குவாரி வேஸ்ட் பவுடர் மாயம். கல் குவாரி வேஸ்ட் பவுடரும் ஒரு சின்ன நில அதிர்வில் பூமிக்கு கீழே போய் விட்டது போல. @ Sankar Mani Iyer
  • Sadeek Ali Abdullah அலட்சியத்தினால் ஏற்படும் உயிர்சேதம் ரொம்ப அவலமானது...

No comments: