மஹாகவி பாரதி
காணா உன் தீரத்தை
கனவுகளில் கண்டோமே.
எழுத்திலே உணர்ந்தோமே - உம்
எண்ணிலடங்கா ஏக்கங்களை.
தமிழ் தந்த உம் சொற்கள்
தடம் புரண்டு செல்லாமல்,
தணியாத தாகமுடன்
தட்டியெழுப்ப நீ நினைத்தாயே.
தரணியெங்கும் விரிந்ததே
தாய் பராசக்தி அருளாலே.
தவழும் குழந்தைக்கு பாட்டிசைத்தாய்
தாமரையானவளுக்கும் ஊட்டி விட்டாய்.
தளராமல் நெஞ்சுயர எடுத்துரைத்தாய்.
தலையாய் தமிழென்றும் நிமிர்ந்திருக,
தவமாய் வாழ்வை நீ கழித்து
தழைக்கவே இயம்பி, இறையடைந்தாய்.
தட்டிக் கேட்க துணிவின்றி
தலைக்குனிந்து செல்கின்றோம் - நீ
தந்த எழுச்சிகளும் குமைந்திடுமே
தமிழினம் தாழும் நிலைக்கண்டு.
தமக்கையாய், தங்கையாய், அவள் நிலையோ
தங்கமாய் ஒளிர்ந்து உயர்ந்திடவே,
தவழவிட்டாய் கவிதைகளில்
தன்னிகரில்லா சிறப்படைய.
தறிக்கெட்டு போகுமென உணர்ந்தாயோ
தரம் தாழுமென நினைத்தாயோ,
தமிழன்னை தந்த மாகவியே...
தலை தாழ்த்தினோம் மீண்டும் உமக்கு அஞ்சலியாய்.
No comments:
Post a Comment