"கூகுள் கிளாஸ்"- தொழில்நுட்ப உலகில் பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் இன்றைய கண்ணாடி. இது மூக்கு கண்ணாடியல்ல. ஆனால் மூக்கு கண்ணாடி போன்று அணிந்துக் கொள்ளக்கூடிய கம்பியூட்டர் (கணினி) இது. கணினி உலகில் அடுத்த படி இதுவாகும்.
கண்ணாடியில் இது எப்படி? பட்டியலாய் காண்போமா?
!) இதில் வை - ஃபை, புளூடூத், டச் ஸ்கிரீன், இன்டர்நெட் வசதிகள் இருக்கு.
2) வீடியோ எடுக்கலாம், போட்டோ எடுக்கலாம். எடுத்ததை அக்கண்ணடியில் உள்ள மெம்மரி கார்டில் சேமித்து வைக்கும். அதை சமுக வலைத்தளங்கள், இ-மெயிலில் ஷேர் செய்யலாம்.
3) உங்களுக்கு வரும் இ-மெயில்களை காட்டும். அதற்கு வாய்மொழி மூலம் பதில் அளித்தால், எழுத்துக்களாக மாற்றி விடும்.
4) ஏதாவது சந்தேகம் தோன்றி, கேள்வி கேட்டால் பதில் தந்துவிடும். உதாரணமாக, உங்களுக்கு தேவையான படங்கள் மற்றும் வழித்தடங்கள், இப்படி நாம் கணினியில் பார்ப்பது போல இணையதளத்தில் தானாக தேடி, கண்ணாடியில் காட்டிவிடும்.
5) பயணிக்கும் போதே, செல்லும் பகுதிக்கு வழிதடம் கேட்டால், மேப் ஸ்கிரீனில் காட்டும்.
6) உலகில் நாம் எங்கு சென்றாலும், நாம் காண்பதை, உடனுக்குடன் அப்படியே நேரடி காட்சியாக வேண்டியவர்களுக்கு காட்டலாம். ஒளிபரப்பலாம்.
7) அடுத்ததாக இதிலுள்ள தொழில் நுட்பம் , நமது அன்றாட பழக்க வழக்கங்களை கவனிக்கிறது. உதாரணமாக, அன்றாடம் அலுவலகத்துக்கு செல்லும் நேரம், வழித்தடம், காலநிலை போன்றவற்றை தெரிவிக்கிறது. (சின்ன வீடு, பெரிய வீடு, அப்படி இப்படியென்று அனைத்தையும் சொல்லும் போலிருக்கிறது. ஹா... ஹா... ஹா...)
8) எல்லாவற்றிக்கும் மேலாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பொது, அந்த நாட்டு மொழியை நமது மொழிக்கு மொழி பெயர்த்து தருகிறது.
** இதை பயன்படுத்தி சென்னை டாக்டர் ராஜ்குமார் செய்த ஆபரேசன் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பட்டு, பலருக்கும் ஆச்சிரியம் ஏற்படுத்தியுள்ளது.
9) அடட... அத்தனையு சொல்லிட்டு, விலை சொல்லவில்லையே. ரொம்ப அதிகமில்லைங்க, 95 ஆயிரம் ரூபாய் தாங்க.
# நீங்க வாங்கினா சொல்லுங்க, சமயத்திலே நானும் மாட்டி பாக்குறேங்க.
# நான் சின்னவனா இருக்கும்போது சொல்லுவாங்க, எக்ஸரே கண்ணாடி இருக்குதுன்னு. கண்ணாடி மாட்டிகிட்டா, உள்ள இருக்கிறத, அப்படியே பாக்கலாமுன்னு, அப்ப ஒரு அரசியல் தலைவர் அந்த எக்ஸரே கண்ணாடிய போட்டுக்கிட்டு இருக்கிறதா பரப்பரப்பா பேசுவாங்க.
இப்போ வந்தே வந்துடுச்சி கம்பியூட்டர் மூக்கு கண்ணாடி.
No comments:
Post a Comment