வருத்தபடா வாலிபனாய் அவனிருந்தான்
வந்தாளே அவளொரு தேவதையாய்.
அணைத்தாளே வளைக்கரத்தால்
துவண்டாளே பூங்கொடியாய்.
குரலிலோ குழலிசைய,
பொழிந்தாளே தேன்மழையாய்.
இணைந்தனரே இசைவாக,
இனித்ததே நாட்களெல்லாம்.
இற்றுப்போன கயிறாக - அவள்,
அவனை நினைத்தாளோ?
இன்று கூண்டில் நிறுத்தி விட்டாள்,
கற்பழித்த காமகனாய்.
ஐயஹோ.. என் செய்வான்?
வந்தவளும் அவளே.
வந்தணைத்தவளும் அவளே.
வந்த வேகத்தில் மறைந்து விட,
மயக்கத்தில் இருந்தவனை,
விலங்கிட செய்து விட்டாள்.
உணர்வுகளின் வேகத்தால்
கூடி மகிழ்ந்த நாட்களது.
ஒன்றோடு ஒன்றிணைந்த
ஓருடல் இதுவென்றாள் .
இடைவெளிகள் ஏதுமின்றி
இடை சேர்த்து திரிந்தனரே.
தலை சாய்த்து அவள் குழவி,
திண்தோள் உமதென்றாள்.
பஞ்சனை மடியென்று
தாலாட்டி படுக்க வைத்தாள்.
நிலையந்த நேரத்திலும்
இதழோடு இதழிணைத்து
தேனென ஒழுக விட்டு,
அமுதமென உறுஞ்சிக் கொண்டாள்.
அன்றவனது இதயமோ
சில்லென்ற பனிமலையாய்.
இன்றது கொதிக்குதடா,
எரிமலையாய் புகைந்துக் கொண்டு.
பொசுக்கிவிட பார்க்கின்றான்,
அவளுடனான நினைவுகளை.
அழுத்தமாய் பதிந்துள்ளதே
கல்படிமங்களாய் அவன் மனத்தில்.
அன்றோ தள்ளாடினான்
அவள் கொஞ்சிய மயக்கத்தில்.
இன்றும் தள்ளாடுகிறான்
அவள் கொடுத்த அதிர்ச்சியில்.
#வருத்தபடா வாலிபர்களே!
வருந்தும் நிலையடையாதீர்.
No comments:
Post a Comment