Translate

Sunday, September 15, 2013

இவரையும் வாழ்த்துவோம்... Mr.Rajagopal



கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகிலுள்ள கொடுங்குளத்தை சேர்ந்த மினி லாரி ஓட்டுனர் ராஜகோபால் கூறுவதை சிறிது வாசியுங்கள்.

குடும்ப வறுமையால் 10ம் வகுப்பு வரை படித்தேன். லாரி கிளீனராக கடுமையாக உழைத்து, மினி லாரி வாங்கினேன். ஒரு முறை சவாரிக்கு செல்லும் வழியில், சாலை விபத்தில் சிக்கியவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், போலீஸ் மற்றும்  பொது மக்கள் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்த்தனர்.

அடிப்பட்டவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிர் பிழைக்க வைத்தேன். 'நீ நல்ல இருக்கணும்... ' என அவர் வாழ்த்தியதை புண்ணியமாக கருதினேன்.

அந்த வாழ்த்து தான், என் வாழ்க்கையையே மாற்றியது. ஏனென்றால், நானும் ஒரு வேளை விபத்தில் சிக்கி, இப்படி மற்றவர்கள் வேடிக்கைப்பார்த்தால், என் மனநிலை எப்படியிருக்குமென சிந்தித்துப் பார்த்தேன்.

அன்று முதல் யார் உயிருக்கு போராடினாலும், இறந்து கிடந்தாலும் அவர்களுக்கு உதவினேன். இதுவர 500க்கு மேற்பட்ட அவற்றை உடல்களை நல்லடக்கம் செய்ததுடன், 15 உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளேன். 20க்கு மேற்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்துள்ளேன்.

மார்த்தாண்டத்திலிருந்து லோடு ஏற்ற, மினி லாரி ஓட்டி செல்லும் போது, என் லாரியை ஒரு அரசு பஸ் வேகமாக கடந்து சென்றது.. அந்த பஸ்ஸின் பின் இரட்டை சக்கரங்களில், ஒன்று இல்லாமளிருப்பதைக் கண்டு, லாரியை வேகமாக ஓட்டி சென்று, பஸ்ஸை நிறுத்தி சொன்ன பிறகுதான் அவர்களுக்கு தெரிந்தது. சக்கரங்களின் நெட்டுகள் சரியாக மாட்டாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் 35 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றியதால், 2011ம் ஆண்டு வீரதீர செயலுக்கான "அண்ணா பதக்கம்" வழங்கி தமிழக அரசு கௌரவித்தது. 

இவரைப்போன்றவர்களை வாழ்த்த வேண்டியதும்,  ஊக்குவிக்க வேண்டியதும் நமது கடமை. இவரை வாழ்த்தவும், இவர் சேவையை பெறவும், அவருக்குரிய தொடர்பு எண்: 98431 07819




நண்பரே, இனிதாகட்டும் இன்றைய நாள் உமக்கும் உமது குடும்பத்தினருக்கும்.

No comments: