எமக்கு சிறு வயதிலிருந்தே, பல சமயங்களில் கனவுகள் தோன்றிக் கொண்டிருக்கிறது. (எமக்கு மட்டுமே என கூறவில்லை. அனைவருக்கும் வருவதுதான்). சில கனவுகள் நினைவுகளில் முழுமையாக பதிந்துவிடும். அப்படிப்பட்ட சில வித்தியாசமாக நினைக்க தோன்றும் கனவுகளை பதிவும் இட்டிருக்கிறோம்.
பெரும்பாலான இக்கனவுகள், எம்மை உறக்க நிலையிலிருந்து முழுமையாக விழிப்படைய செய்யவும் , மாறுப்பட்ட அல்லது ஒரே நிலையில் நீண்ட நேரமாக துயில் கொண்டிருக்கும் எமை மீள செய்யவும் இப்படிப்பட்ட கனவுகள் வருகிறது என்பதையும் உணர்ந்துக் கொண்டோம்.
இருப்பினும் பல கனவுகளுக்கு காரணமே அறியயியலாமல் இருக்கும். சுமார் இந்த பத்து நாட்களில் வந்த சில கனவுகள் உங்களுடன்.
1) ஒரு பத்து நாட்களுக்கு முன் உறக்கதில் இருந்த போது கதவு தட்டும் சத்தம் கேட்டு, இதோ வருகிறேன் என கூறியபடியே சென்று கதவைத் திறந்தால், அங்கு யாருமில்லை. ஓ.. விடிந்திருந்தது பொழுது.
2) என்னங்க ... எம் மாதரசியின் குரல், என்னம்மா... என நவின்றபடியே யான் எழ,
என்னங்க ... என்றபடி எம் மனையாள் அங்கு வர, எதற்கு எமை எழுப்பினீர் என்றோம். அவர் இல்லையே என இயம்ப, அப்போது தான் தெரிந்தது, அது கனவு என்று.
3) ஹி.. ஹி.. ஹி... சொல்ல வெட்கமா இருக்கு, இருந்தாலும் சொல்லி விடுகிறேன். அமர்ந்தபடியே யாம் உறங்கிக் கொண்டிருக்கிறோம். அப்போது கன்னத்தில் ஒரு பளார், விட்டது யாருமில்லைங்க. எம் மனையாட்டிதாங்க அது. ஓ...வென கன்னங்களை தேய்த்தபடியே விழித்தோம். தெரிந்தது அதுவும் கனவுயென்று.
4) நேற்று முன்தினம் யாம் உறங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு கல் எம் தோள் மூட்டையைத் தாக்க, பயங்கர வலியுடன் விலுக்கென்று விழித்தெழுந்தோம். வலியையும் உணர்ந்தோம். பின் அறிந்தோம், ஒரே பக்கமாக நீண்ட நேரம் படுத்து உறங்கி இருக்கிறோம், அதனால் தான் இந்த தோள்பட்டை வலியென்று.
இவற்றை நினைவுபடுத்தி எழுதிக்கொண்டிருந்த நேரத்தில், இதற்கு காரணமான இன்றைக்கு வந்த கனவு மறந்து விட்டதுங்க. ஹா.. ஹா... ஹா....
# கனவுகள் நிசமாகுமென்றால், ஐயகோ...எம் இல்லத்தரசியிடம் கன்னத்தில் அடிவாங்குவேனா?
No comments:
Post a Comment