கல்வியில் கரை கண்டவளோ, காமத்திலும் கரைப் புரண்டாள்.
காலத்தால் சமூகமோ, கட்டி வைத்தது தனித்தனியே.
காவலை மீறிக்கொண்டு, காணாத இடங்களில்
கட்டயவிழ்த்த போதெல்லாம், காட்சிகளும் நீள்படத்தில் நீலமாயானதே.
காலங்கள் உருண்டோட, காதலனைக் கைக்கழுவி,
கழுத்தை நீட்டினாளே, கணவனை சமுகத்தில் வரிந்தாளே.
கட்டி வைத்த நாள் மூன்றில், காண வந்தான்,
காணிக்கை ஆனவளை கவர்ந்து செல்ல.
காமத்தினால் நிலை மறந்து,
கரம் பிடித்தவன் கண் பார்க்க,
காமக்காட்சிகளை முன்விரித்தான்
கடந்தகால நீள்படமான நீலப்படத்தை.
கண்டவனோ பதறாமல், கடைந்தவனின் மிரட்டலுக்கு
கட்டளையாய் அடிபணிந்து, கட்டியவளை அனுப்பி வைத்தான்.
காமமே முதலென, கட்டியவனை தனியே விட்டு,
காதலனுடன் சென்றாளே, களியாட்டம் மீள்தொடர.
காணாத சொர்க்கத்தையே, காதலனிடம் கண்டாளோ,
கட்டியதை அவிழ்த்து போட்டு, காட்டிக்காட்டி துகித்தாளோ.
கரைப்படும் நிகழ்வுகளோ, காட்சிகளாய் மீண்டும் பதிய,
கற்பனையில் மிதந்தாளோ கலைபடமாய் நினைத்துக் கொண்டு.
காவலனாய் தானிருந்தும், கடமையை மறந்தவனாய்
காக்க வேண்டிய நிலையிருந்தும், கரை கடந்து சென்றானே.
காமத்தின் மோகத்தினால் கடித்து குதறியவன்
கலைத்துவிட துடித்தானே, கட்டி வைத்த கூட்டினையே,
காதலியாய் அவளிருந்தும்,கணினியில் காட்சிகளை பதிவேற்றி
கப்பலில் ஏற்றிவிட்டான் மானத்தையே, காண்பவர் குதுகலிக்க.
கடைந்தெடுத்த செயல்களால், கம்பிகளை எண்ணுகிறான்.
கழிவான எண்ணத்தால், காற்றில் போமே அவர் மானம்.
காலங்கள் போனாலும் கடுகளவு மனத்திலே,
கருக்கேன்று உறுத்துமே, கருவேல முள்ளாக.
கடைச்சரக்காய் ஆனவளின் வாழ்வு, கனியுமோ இனி?
கரும்புள்ளி மிளிருமோ? கமழுமோ நிகழ்வுகள்?
No comments:
Post a Comment