திருவள்ளூர் எல்லாபுரம், மஞ்சங்காரணியை சேர்ந்த 37 வயது குணசேகரன், சோழவரம் இருளப்பட்டில் மீன் வலை தயாரிக்கும் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தவர், சமிபத்தில் பதவி உயர்வு மூலம் புதுசேரியில் திருவண்டார்கோவில் கிளைக்கு பதவி உயர்வில் மாற்றலாகி சென்றார்.
கடந்த 5/9/13 அன்று பணியில் இருந்தபோது எதிர்பாரா விதமாக, இஞ்சினில் சிக்கி பலத்தக் காயமடைந்தவரை, ஆபத்தான நிலையில் பாண்டிசேரி ஜிப்மர் மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5, 6 நாட்களுக்கு பிறகு குணசேகரன் மூளைசாவு நிலையை அடைந்தார்.
இதையடுத்து, அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவர் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததை ஒட்டி, அவரின் கண்கள், சிறுநீரகம், இதயம், உள்ளிட்ட எட்டு உறுப்புகள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த எட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
குணசேகரனுக்கு, வித்யா என்ற மனைவியும், சினேகா, ரஞ்சித் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். சிக்கலான நேரத்திலும், தனது கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த வித்யாவையும், அவரது குடும்பத்தினரையும் டாக்டர்கள் பாராட்டினார்கள்.
குணசேகரனின் ஆத்மா சாந்தி அடையவும், குணசேகரனின் பிரிவால் சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர் மனைவி வித்யாவுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கல்களையும் வருத்தத்தையும் பகிர்ந்துக் கொள்வதுடன், எட்டு பேருக்கு மறுவாழ்வு அளிக்க ஒப்புதலளித்த நமது பாராட்டுகளையும், நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment