அன்னை தெரசா இன்னும் வாழ்கிறார் !
அன்னை தெர சாவுக்குச் சாவா ? இங்கே
ஆர் சொன்னார் ? அன்னையவள் பூமு கத்தின்
புன்னகைக்குச் சாவுண்டா ? சேவை தந்த
புகழுக்குச் சாவுண்டா ? கருணை சிந்தும்
இன்னமுத விழிகளுக்கும், இரண்டு கைகளுக்கும்
என்றேனும் சாவுண்டா ? எவர் சொன்னார்கள் ?
இன்னமதம், இன்னஇனம் என்றில் லாமல்
எல்லோர்க்கும் அன்னையவள் சாக மாட்டாள் !
மானிடர்க்குத் தொண்டு செய மண்ணில் வந்தாய் !
மாறாத சேவையினால் கண்ணில் நின்றாய் !
கூனுடலும் குற்றுயிரும் நிமிர்ந்து நின்று
கும்பிட்டுக் கைதொழவே வாழ்வை வென்றாய் !
கானுளவும் வண்டெனவே தேடிக் தேடிக்
காலமெலாம் மானிடர்க்கே வாழ்ந்து கொஞ்சம்
வானுலகத் தேவர்க்கும் தொண்டு செய்ய
வழித்தேடிப் போயுள்ளாய் ! மறைந்தாய் இல்லை !
தேவைக்கே வாழாமல், தன்னைப் பெற்ற
தெருவுக்கே வாழ்ந்த மகள் தெரசாவிற்கு,
சேவைக்கே பிறந்திட்ட ஆத்தூர் மண்ணின்
சிறப்பான சுழற் சங்கம் (ரோட்டரி சங்கம் )
சிரம் தாழ்த்தி வணங்குகிறது !
இவண்
RTN.N.செல்வராஜ், தலைவர்.
RTN.D.சீனிவாசன் , பொருளாளர்.
RTN.T.தர்மலிங்கம் , செயலாளர்.
மற்றும் உறுப்பினர்கள்
ஆத்தூர் ரோட்டரி சங்கம்
** அன்னை தெரசா மறைவையொட்டி, இந்த அஞ்சலி கவிதையை, ஆத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் வெளியிட்டிருக்கிறார்கள். தற்சமயம் எமது சகோதரி மூலம் கிடைக்கப் பெற்றோம். அவரின் 16ம் ஆண்டின் நினைவு நாளை ஒட்டி நினைவஞ்சலியாக மீண்டுமதை வெளியிட்டிருக்கிறோம்
No comments:
Post a Comment