அமெரிக்காவில் கன்சாஸ் சிடியில் உள்ள கத்தோலிக்க டயோசீஸ் கட்டுப்பாட்டிலுள்ள தேவாலயத்தில் பாதரியாராக பணியாற்றியவர் ஷாஷ்ன் ராடிகன் வயது 47. பழுதான தன் 'லேப்டாப்' பை சரி செய்வதற்காக கம்ப்யூட்டர் நிபுணர் ஒருவரிடம் கொடுத்தார்.
அதை சரி செய்தபோது, அதில், குழந்தைகளின் ஆபாசப்படங்கள் ஏராளமாக இருப்பதை பார்த்த கம்ப்யூட்டர் நிபுணர், கத்தோலிக்க பிஷப் ராபட் ஃபின்னிடம் ஒப்படைத்துள்ளார். பிஷப்போ, போலீசிடம் ஒப்படைக்காமல், பாதரியாரை, குழந்தைகளிடமிருந்து விலகியிருக்கும்படி உத்தரவு இட்டுயிருக்கிறார்.
ஆனால் அவரோ அதை பொருட்படுத்தாமல் மீறியதால், 2011ம் ஆண்டு போலீசில் ஒப்படைக்க, இந்த புகார் வழக்கில், தன குற்றங்களை ஒப்புக்கொண்ட ராடிகன், குறைந்தபட்ச தண்டனையாக 15 ஆண்டுகள் வழங்க கோரியிருக்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, 50 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருக்கிறார்.
தனி மனித சுதந்திரம் நிறைந்துள்ள அமெரிக்க நாட்டிலேயே, மடிக்கணினியில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை சேமித்து வைத்ததற்காகவே 50 ஆண்டு சிறை தண்டனை வழங்கி இருக்கிறார்கள். குறைந்தபட்ச தண்டனையே 15 ஆண்டுகள், இதை கவனியுங்கள். ஆனால் இந்திய நாட்டிலோ மழலைக் குழந்தை முதல் சாகப்போகும் கிழவி வரை கற்பழிக்கலாம், கொலை செய்யலாம், கொள்ளையடிக்கலாம். யாரையும் கேட்க நாதி கிடையாது. அப்படியே கேட்டாலும் பரிந்து பேச சிலர். சீரழிந்துக் கொண்டிருக்கிறது இந்திய திருநாடு கட்டுப்பாடுயின்றி.
No comments:
Post a Comment