தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த ஏழ்மையான மாற்றுத்திறனாளியும், எமது நண்பருமான திரு.கிருஷ்ணன் அவர்களின் மனைவி மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் , தொடர் மருத்துவத்திற்கு பண உதவி கிடைக்காமல், இன்று (20/09/2013) காலை சிறிது நேரத்திற்கு முன் இறைவனடி சேர்ந்து விட்டார் என்பதை மிகவும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது மனைவி ஆத்மா சாந்தி அடையவும், சொல்லொண்ணா பெரும் துயரத்தில் மூழ்கியிருக்கும் நண்பர் திரு .கிருஷ்ணன் அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
# முகநூளில் வேண்டுதல்கள் வெளியிட்டும், பல நண்பர்களிடம் தொடர்புக் கொண்டும் , அவர் மனைவிக்கு தேவையான மருத்துவ உதவியை பெற்று தரமுடியாமல் போனது, எமது நெஞ்சை உலுக்கி எடுக்கிறது.
No comments:
Post a Comment