சென்ற மாதம் எங்கள் வீட்டு சமையல் அறையிலும், சாமி அறையிலும், ஒரு பெருச்சாளி அடிக்கடி நுழைந்து சேதம் செய்து ஆட்டம் போட்டது. ஆனால் கண்களில் படவேயில்லை. எங்கள் வீட்டு மகாராணியோ புலம்பிக் கொண்டிருந்ததுடன், பட்டியல் நீண்டது எம் மீதும், கதவை திறந்து வைத்து விடுகிறீர்கள். எலி வருவதையும் கவனிப்பதில்லை என்று.
பொறுத்தது போதுமென பொங்கியெழுந்தோம். கட்டளையிட்டோம் மகாராணிக்கே, தேங்காய் துண்டில் மருந்து தடவி வைக்க. அதன்படி சில இடங்களில் தேங்காய் துண்டுகள். அதை கண்ட பெருச்சாளிக்கு பெருத்த கோபம் போலும், சாமான்கள், மாவு பொருட்கள் மற்றும் மிளகாய் தூளையும் உருட்டி விட்டிருந்தது.
இந்த பெருச்சாளிக்கு மிகவும் விருப்பமான தக்காளியை துண்டுகளாக்கி மருந்து தடவி மீண்டும் வைத்தோம். மூன்று நான்கு நாட்கள் ஆகியும் தக்காளி துண்டுகளும் தொடப்படவில்லை, பெருச்சாளி வந்ததற்கான அறிகுறியும் இல்லை.
# பெருச்சாளி கண்ணில் மிளகாய் தூள் விழுந்திருக்குமோ?
2 comments:
தூள்.
ஆமாம்.. தூள் மிளகாய் தூள்.
Post a Comment