Translate

Tuesday, September 3, 2013

புரோட்டா சாப்பிடாதிங்க!






கோதுமையிலிருந்து நாள்ல குணங்கள் அனைத்தையும் நீக்கப்பட்டதுதான் மைதா. முழுக்க முழுக்க மைதா மாவிலிருந்து தயாரிக்கப்படுவது தான் புரோட்டா. அத்துடன் ஊற்றி சாப்பிடும் குருமா போன்ற கிறேவிகளில் தான், புரோட்டின், கலோரிகள் கிடைக்கின்றன.

அளவுக்கு அதிகமாக எண்ணெய் சேர்க்கப்படுவதால், உடலில் கொழுப்பு சத்து அதிகமாகிறது, அதனால் எடை கூடுகிறது. அத்துடன் சக்கரை வியாதி, இதய நோய், ரத்தக் கொதிப்பு இப்படி  உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பல நோய்கள் வருகின்றன.  ஹார்மோன் குறைப்பாடு உள்ளவர்கள் கண்டிப்பாக புரோட்டா சாப்பிடக் கூடாது.

உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு புரோட்டா ஜீரணமாகிவிடுகிறது. ஆனால் அதிக உடல் அசைவுகள் இன்றி, 'டெஸ்கில்' அமர்ந்து, உடலுழைப்பு குறைவான வேலை செய்பவர்களுக்கு, புரோட்டா தீங்கு விளைவிக்கும். இதனால்தான் அதிகம் ஓடிவிளையாடாத குழந்தைகளுக்கு புரோட்டா சாப்பிட்டால் வாயிற்று வலியால்  அவதிப்படுகின்றனர்.

எனக்கு புரோட்டா பிடிக்கும், சாப்பிட்டே தீருவேன் என்பவர்கள், அதன் விளைவை ஈடு செய்ய, தினமும் வாக்கிங், உடற்பயிற்சி என சில உடல் உழைப்பு செயல்களில் ஈடுபட வேண்டும். மைதாவில் தண்ணீர் ஊற்றி, பிசைந்து, பக்குவமாக செய்வதற்கு அதிக உடலுழைப்பு தேவைப்படுவதால், ஹோட்டல்களில் மட்டுமே புரோட்டா கிடைக்கிறது. வீட்டில்  சமைக்காத நேரங்களில், வெளியே புரோட்டா சாப்பிடுவது முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

4 comments:

அ.பாண்டியன் said...

பொதுவாகவே கடைகளில் ருசிக்காக சாப்பிடுவதை கைவிடுவது நல்லது. விழிப்புணர்வு ஊட்டும் பதிவிற்கு நன்றி.

சார்லஸ் said...

புரோட்டா அதிகம் உண்ணும் ஊர் மதுரைதான்! எண்ணிலடங்கா புரோட்டா கடைகள் உள்ளன .

Dhavappudhalvan said...

மிக்க மகிழ்ச்சி நண்பரே, தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும். மேலும் சில துணை வலைப்பதிவுகள் பதித்து வருகிறோம். தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கையில் வாசித்து தங்கள் மேலான கருத்துக்களை பதியும்படி கேட்டுக் கொள்கிறோம். நாட்கள் இனிதாக கழிய வாழ்த்துக்கள்.@ அ. பாண்டியன்

Dhavappudhalvan said...

மிக்க மகிழ்ச்சி நண்பரே, தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும், தகவலுக்கும். இத்துடன் மேலும் சில துணை வலைப்பதிவுகள் பதித்து வருகிறோம். தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கையில் வாசித்து தங்கள் மேலான கருத்துக்களை பதியும்படி கேட்டுக் கொள்கிறோம். நாட்கள் இனிதாக கழிய வாழ்த்துக்கள்.@ charles