Translate

Wednesday, November 13, 2013

காற்றின் பெயர்களில் ஓர் இனிமை.



வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுகளுக்கு தமிழில் மாறுப்பட்ட பெயர்கள் இருக்கின்றன.

வடக்கிலிருந்து வீசும் காற்று = வாடை.
தெற்கிலிருந்து வீசும் காற்று = சோழகம் 
தெற்கிலிருந்து மென்மையாக வீசும் காற்று = தென்றல்.
கிழக்கிலிருந்து வீசும் காற்று = கொண்டல்
மேற்கிலிருந்து வீசும் காற்று = கச்சான்

தென்மேற்கு காற்றுக்கு = சோழக கச்சான்
தென்கிழக்கு காற்றுக்கு = சோழகக் கொண்டல்

காற்றுக்கு வேறு பெயர் = வளி ( வளி மண்டலமென கேள்வி பட்டீர்பீர்கள்)
குறுகிய நேரத்திற்கு வேகமாக வீசும் காற்று = வன்காற்று.
ஒரு நிமிட நேரம் நின்று பலமாக வீசும் காற்று = பாய்புயல்
நீண்ட நேரம் வீசும் காற்றுக்கு = புயல்
நீண்ட நேரம் பலமாக சுழன்று வீசும் காற்றுக்கு = சூறாவளி



தம்பி கலாநிதி, வீட்டில் வீசும் காற்றுக்கு என்ன பெயர்? ஹா... ஹா.. ஹா.. 

உங்களுக்கு தெரிந்த காற்று பெயர்களை குறிப்பிடுங்கள் நண்பர்களே!
கண்காண காற்றுக்கு என்ன படம்? இதைவிட.

இனியநாள் வாழ்த்துக்கள் நட்புகளே.
 

No comments: